கோயம்புத்தூர் (Coimbatore): தமிழக வனப்பிரிவை சேர்ந்த மூன்று யானைகள் உயிரிழந்தன. முதல் சம்பவம் மேட்டுப்பாளையம் (Mettupalayam) அருகே காந்தியூரில் 35 வயது பெண் யானை சுட்டுக் கொல்லப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வன அதிகாரிகள் இருவரை கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில், கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு நோய்வாய்ப்பட்ட பெண் யானைகளில் ஒன்று கோவை சிருமுகையில் இறந்தது. மூன்றாவது சம்பவம் நீலகிரி (Nilgiris) மாவட்டத்தில் ஒரு ஆண் யானை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தது.
துப்பாக்கி குண்டு (Bullet) யானையின் மூளையில் இடது காது வழியாக துளைத்து தாக்கியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தன. கண்டியூரில் உள்ள விவசாய நிலத்தில், துப்பாக்கியால் சுட்டதால் கடுமையான இரத்த இழப்பு ஏற்பட்டதன் காரணமாக, 35 வயது பெண் யானை இறந்தது. இது ஜம்போ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. வன கால்நடை அலுவலர் ஏ சுகுமார் பிரேத பரிசோதனை நடத்தினார். "துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் போல இருக்கும் ஒரு நெளி கூர்மையான முனைகள் கொண்ட உலோகத் துண்டு விலங்கின் மூளையில் காணப்பட்டது" என்று மாவட்ட வன அலுவலர் (டிஎஃப்ஒ) டி வெங்கடேஷ் தெரிவித்தார்.
READ | காளை மாட்டுடன் சண்டையிடும் குட்டி வாத்து; வைரலாகும் வீடியோ.
இந்த ஜம்போவின் மரணம் தொடர்பாக தேக்குப்பட்டியைச் சேர்ந்த ஜி.ராமசாமி (63), ஜி.கிருஷ்ணசாமி (55) ஆகிய இரு சகோதரர்களை மேட்டுப்பாளையம் (Mettupalayam ) வன அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், காந்தியூரில் கால்நடைகளுக்காக வளர்க்கப்பட்ட தீவனத்தை அடிக்கடி வந்து சாப்பிட்டு செல்வதால், யானையை கொல்ல இருவரும் முடிவு செய்துள்ளனர். இவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் பிரிவு 9 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமுகையில் மரணம்
ஜம்போ (Jumbo) யானை இறந்த பிறகு, சிகிச்சை பலனின்றி 22 வயது யானை இறந்தது. வன கால்நடை மருத்துவர் ஏ சுகுமார் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தினார். விலங்குகளின் இறப்புக்கான சரியான காரணம் அதன் முக்கிய ஆய்வக சோதனைக்குப் பிறகுதான் அறியப்படும் எனக் கூறினார். காந்தியூரில் (Kandiyur) நடந்த சம்பவத்தை தவிர அனைத்து யானைகளும் இயற்கையாகவே இறந்து விட்டது என டி.எஃப்.ஓ. அதிகாரி தெரிவித்தார்.
READ | அப்பாவி குரங்கை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள்; வைரலாகும் Video!
இதுவரை 139 யானைகள் இறந்துள்ளதால், கோயம்புத்தூர் வனப் பிரிவில் யானைகளின் இயற்கையான மரணம் குறித்து ஆய்வு செய்ய உயிரியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (என்.சி.எஸ் - Nature Conservation Society) தலைவர் என்.ஐ. ஜலாலுதீன் கூறினார். மேலும் பேசிய அவர், "சமீபத்திய காலங்களில், அருகில் உள்ள வனப் பிரிவுகளான (Sathyamangalam) சத்தியமங்கலம் (பல்வேறு காரணங்களால் ஒன்பது யானை இறப்பு), ஹாசனூர் (Hasanaur ) (ஏழு யானை இறப்பு) மற்றும் நீலகிரி போன்ற வனப்பகுதியில் பல யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறினார்.
நீலகிரி சம்பவம்:
மூன்றாவது சம்பவத்தில் முதுமலை புலி ரிசர்வ் (எம்.டி.ஆர் - Mudumalai Tiger Reserve) இல் மசினகுடி அருகே தனியாருக்கு சொந்தமான 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எஸ்டேடில் மின்சாரம் பாய்ந்து இறந்தது. "அங்கு உள்ள மூங்கில் தளிர்கள் சாப்பிடும்போது ஜம்போ மின்சாரம் தாக்கி இறந்திருக்க வேண்டும். விலங்குகளின் தந்தங்கள் அப்படியே உள்ளன என்று வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.