சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான அரசு பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செய்துவருகிறது. இன்று திடீரென 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடை மாற்றம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் (Chief secretary of Tamil Nadu) இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ள்ளார்.
நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் கே எஸ் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்ஸின் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மீன்வளத்துறை ஆணையராக பணியாற்றுவார். மேலும் இவருக்கு மீன்வளத்துறை மேலாண் இயக்குனர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
Also Read | தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு IAS நியமனம்!
இதுவரை, மீன்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனர் பதவி வகித்துவந்த கருணாகரன் ஐ.ஏ.எஸ், இனிமேல் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக பணியாற்றுவார்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் பதவி வகித்த அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் பணி மாற்றம் செய்யப்பட்டு தொழிலாளர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குனர் சரவணன், இனிமேல் கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பொறுப்பையும் கவனிப்பார் என்று தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
Also Read | சங்கர் ஜிவால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையர்: உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR