அதிமுகவுக்கு போக முடிவு எடுத்த பிறகுதான் அமமுகவில் இருந்து விலகியுள்ளார் இசக்கி சுப்பையா!!
அ.ம.மு.க-விலிருந்து கட்சி நிர்வாகிகள் சிலர், மாற்றுக் கட்சிக்குத் தாவி வருகிற நிலையில், அக்கட்சியின் பெயர்ப் பட்டியலை இன்று டி.டி.வி.தினகரன் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக, பெங்களூரு சென்ற தினகரன் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையில், அமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவிடம் அளித்து தினகரன் ஒப்புதல் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த இசக்கி சுப்பையா, தங்க தமிழ்ச்செல்வன் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சசிக்கலாவை சந்தித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில்; அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை; அவர்கள் வெறும் நிர்வாகிகள் தான். அதிமுகவுக்கு போக முடிவு எடுத்த பிறகுதான் அமமுகவில் இருந்து விலகியுள்ளார் இசக்கி சுப்பையா. பதர்கள்தான் வெளியே சென்றிருக்கின்றன. விதைகள் இன்னும் இங்கேயேதான் இருக்கின்றன. அமமுகவில் இருந்து விலக முடிவு எடுத்த பின்பு என்னை குறை சொல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.