திருவள்ளுவர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக தோழிகளிடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, தோழிகள் உணவருந்தச் சென்ற நேரம் பார்த்து, விபரீத முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை உயரதிகாரிகள், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பள்ளி நிர்வாகம் முறையான தகவல் அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் பலர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக பள்ளி வளாகம் மற்றும் கிராமத்திற்குள் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பள்ளிக்குள் வைத்தே ஆசிரியர்களிடம் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தரப்பில் உறவினர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கீழச்சேரி பள்ளிக்கு புறப்பட்டார். இதனிடையே, மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்; திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
விசாரணையில் முடிவில்தான் மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் உடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தற்போது திருவள்ளூரில் +2 மாணவி உயிரிழப்பு விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளையும், சக மாணவிகளின் பெற்றோர்களையும் பீதியில் உறைய வைத்துள்ளது.
மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ