தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு வருபவர்கள் நிச்சையம் குடை கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "NO UMBRELLA Umbrella, NO ALCHOHOL ! திருப்பூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் பொருட்டு மதுபான கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து, குடை பிடித்து நின்று மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது. #TASMAC" என பதிவிட்டுள்ளார்.
NO UMBRELLA O ALCHOHOL ! திருப்பூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் பொருட்டு மதுபான கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து, குடை பிடித்து நின்று மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது. #TASMAC
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) May 5, 2020
44 நாட்களுக்குப் பிறகு, மே 7 முதல் தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு திங்களன்று வெளியிட்டது. இருப்பினும், டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் அனுமதிக்கப்படாது எனவும், கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வெளியீட்டில் தமிழக அரசு இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது., “அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மதுபானக் கடைகளை இயக்க உத்தரவிட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் அண்டை மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குச் செல்கின்றனர். அத்தகையவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் நிறைய சிரமங்கள் எதிர்கொள்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மே 7 முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது." என குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய கட்ட பூட்டுதலுக்கு சில தளர்வுகளை மையம் அனுமதித்துள்ளது என்றும், அதில் மதுக்கடைகள் இல்லாமல் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியது.