ரூ.40 செலவில் 280 கி.மீ பயணிக்கலாம் - அசத்திய கிராமத்து இளைஞர்..!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லித்தியம் பேட்டரில் இயங்கும் ஜீப்பை உருவாக்கியுள்ள இளைஞர் வெறும் 40 ரூபாய் செலவில் 280 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என அசத்தி வருகிறார்.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 19, 2022, 05:37 PM IST
  • லித்தியம் பேட்டரியால் உருவாக்கப்பட்ட ஜீப்
  • ரூ.40 செலவில் 280 கி.மீட்டர் தூர பயணம்
  • மெக்கானிக்கல் என்ஜினீயர் மாணவர் அசத்தல்
ரூ.40 செலவில் 280 கி.மீ பயணிக்கலாம் - அசத்திய கிராமத்து இளைஞர்..! title=

இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் தற்போது இருக்கின்ற பெட்ரோல் டீசல் விலை காரணங்களால் கார் என்பது கனவாகவே போய்விடும் போல, ஒரு பக்கம் எலக்ட்ரிக்கல் கார்கள் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு மாற்றாக சிவகங்கை அருகே கிராமத்து இளைஞர் ஒருவர் ஜீப்பிற்குத் தேவையான உதிரிப் பாகங்களை கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத விவசாயத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் ஒரு ஜீப்பை வடிவமைத்து உள்ளார். 

Electric vehicle,batteries,sivagangai,Engineer,mechanical

கீழடி என்றாலே நாகரீக எடுத்துக்காட்டாக விளங்கும் உலகின் தொன்மையான பொருட்கள், தமிழனின் வாழ்விடம் முறைகள் மட்டுமே நம் நினைவிற்கு வரும் அப்படிப்பட்ட கிராமத்தில் விவசாயிகளான, அருணகிரி-கவிதா தம்பதியரின் ஒரே மகன் கவுதம். ஏழ்மை நிலையிலும்  தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கனிக்கல் எஞ்சினியரிங் பயின்று முடித்துள்ளார்.

Electric vehicle,batteries,sivagangai,Engineer,mechanical

படித்து முடித்துவிட்டுக் கிடைக்கின்ற வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது கௌதமிற்கு மாசு ஏற்படாத வகையில் விவசாயத் தேவைக்கு பயன்படுத்துவதற்கு ஜீப் ஒன்றையும் தயார் செய்து முடிவெடுத்துள்ளார். தான் வேலை செய்து சேர்த்து வைத்த பணம், பெற்றோரிடம் இருந்து வாங்கியது என மொத்தம் ரூ.2,80,000 செலவழித்து 4 சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் திறனுடன் பேட்டரியில் ஜீப்பை வடிவமைத்துள்ளார்.

Electric vehicle,batteries,sivagangai,Engineer,mechanical

மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது Oppo-வின் புதிய ஸ்மார்ட்போன்: விவரங்கள் இதோ

தான் உருவாக்கிய ஜீப்பில் லித்தியம் பேட்டரி வாங்கி பயன்படுத்தினால் சுமார் 40ரூபாய் செலவில் 280 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் குறிப்பாக எந்த ஒரு இரைச்சலும் இன்றி பயணிக்கலாம் என்று கவுதம் கூறுகிறார். தற்போது வாடகைக்கு வாங்கிய பேட்டரிகளை கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் அரசு உதவினால் இதேபோன்று பேட்டரி கொண்டு  மோட்டார் சைக்கிள் உருவாக்க முடியும் என்கிறார் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் கவுதம். 

மேலும் படிக்க | Vivo X80-ல் கிடைக்கிறது பம்பர் தள்ளுபடி: முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News