பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்...

தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது!!

Last Updated : Feb 1, 2019, 03:08 PM IST
பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்... title=

தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது!!

தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8 ஆம் தேதி பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதி அமைச்சருமான  ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டபேரவை செயலாளர் ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட உள்ளது, இதுவரை ஒதுக்கிய நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது உள்ளிட்டவை நிதி நிலை அறிக்கையும் அன்று தாக்கல் செய்யப்படும். 

பட்ஜெட் மீதான உரை 4 நாட்கள் நடைபெறும், என்றும் பட்ஜெட் குறித்த  அலுவல் ஆய்வு கூட்டமும் அன்றைய தினமே நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

Trending News