டெங்கு காய்ச்சலை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்: MKS

டெங்கு காய்ச்சலை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!

Last Updated : Oct 22, 2019, 01:40 PM IST
டெங்கு காய்ச்சலை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்: MKS title=

டெங்கு காய்ச்சலை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்காததால் குழந்தைகள் சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 3,500 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க. சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். 

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய முயற்சி எடுக்க வேண்டும். நிலவேம்பு கசாயத்தால் காய்ச்சலை கட்டுப்படுத்தலாம். தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 2000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து வர வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.  

 

Trending News