நரிக்குறவர் குடும்பத்தை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம்!

பேருந்திலிருந்து நரிக்குறவர் குடும்பத்தை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம்!   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2021, 08:34 AM IST
நரிக்குறவர் குடும்பத்தை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம்! title=

நாகர்கோவிலில் பேருந்திலிருந்து நரிக்குறவர் குடும்பத்தை கீழே இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வந்த பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பேருந்தில் வந்த ஒரு முதியவர் ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டனர். 

ALSO READ | கண்ணீர்மல்க போராடிய மீனவ மூதாட்டி - அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

பேருந்தில் வந்த அந்த பெண்மணி சத்தமாக பேசியதற்காக இறக்கிவிடப்பட்டதாக சில தகவல்கள் கூறப்படுகிறது. இருப்பினும் இவ்வாறு வலுக்கட்டாயமாக அந்த குடும்பம் இறக்கி விடப்பட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.  இதனையடுத்து நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தை பேருந்திலிருந்து கீழே இறங்கிய விவகாரத்தில்,  ஓட்டுநர் நெல்சன் மற்றும் உடைமைகளை தூக்கி வீசிய  நடத்துநர் ஜெயபாலன் ஆகியோரை போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.

bus

மேலும் சில நாட்களுக்கு முன்னர் அதே கன்னியாகுமரி பகுதியில் உள்ள குளச்சல் என்ற ஊரில் மீன் விற்கும் மூதாட்டியை நடத்துனர் ஒருவர் பேருந்திலிருந்து பாதி வழியிலேயே இறக்கி விட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் குடும்பம், வலுக்கும் எதிர்ப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News