10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மத்திய அமைசரவையில் ஒப்புதல் பெற்றது. பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதா கடந்த ஜனவரி 14 ஆம் தேதி குஜராத்தில் அமலுக்கு வந்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டம் அமலுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டத்திற்கு பல பகுதிகளில் எதிர்க்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு திட்டத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்து வந்தார். இதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி இந்த திட்டத்தை எதிர்த்து DMK அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வலக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.