கோவில் சொத்துக்கள் அறநிலைய துறையின் உடமை அல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

Madras HC on Temple and Temple Assests: கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை நீதிமன்றம் அறிவுறுத்தல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 13, 2022, 01:19 PM IST
கோவில் சொத்துக்கள் அறநிலைய துறையின் உடமை அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் title=

சென்னை: கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாக கருதக் கூடாது; கோவில்களை அறநிலைய துறை கோவில்களாகவோ உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாகவோ; கோவில்களை அறநிலைய துறை கோவில்களாகவோ உரிமை கோர அரசுக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கை திருச்சி  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தொடுத்த வழக்கில், கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை, சம்பந்தப்பட்ட கோவில்களின் நலனுக்கு மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட கோரியிருந்தார்.

மேலும் படிக்க | RSS அமைப்பின் சமூக ஊடக பக்கங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது

இந்த வழக்கை சென்னை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை சட்டப்படி, கோவில் சொத்துக்களை கோவில் நலனுக்காக, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் குத்தகைக்கு விட அனுமதியில்லை என்பதை நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது.

கோவில் சொத்துக்களை குத்தகைக்கு வழங்க அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அதுசம்பந்தமாக அறங்காவலர்களின் ஆட்சேபனைகளை கேட்க வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க | Independence Day: மூவர்ணக் கொடியில் ஜொலிக்கும் கோல்கொண்டா கோட்டை

மேலும், கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது எனவும், அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி மட்டுமே குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ விட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதாவது, கோவில் சொத்துகளின் பாதுகாக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத் துறைக்கு உண்டு, ஆனால், கோவில்கள் மற்றும் அதன் சொத்துக்களின் உரிமை கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் படிக்க | 75வது சுதந்திர தினவிழா: மாரத்தான் போட்டி, எல்.முருகன் தொடங்கி வைத்தார்

மேலும் படிக்க | கோயிலுக்குள் பட்டியலின தம்பதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News