விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் அல்லது முன் அனுமதியி பெறாமலும் யாராவது விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுக்குறித்து அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டதாவது: முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போதோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போதோ யாராவது உயிரிழந்தால், அவர்களுக்கு பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.