ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரம் அருகே அமைத்துள்ள தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டியில், பெட்டியாக துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணி வெடிகள் மற்றும் கையெறி குண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக நேற்று பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட போது ஆயுத குவியல்கள் இருப்பது கண்டுபிடிக்கயப்பட்டது.
இதையடுத்து, தங்கச்சிமடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், ஆயுதக் குவியல்களை காவல் துறையினர் கைப்பற்றினர். புதைத்து வைக்கப்பட்டிருந்த, அந்த ஆயுதக் குவியல்களில் இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 19 தோட்டா பெட்டிகள் இருந்தன. தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் இருந்தன. 5 கண்ணிவெடி பெட்டிகள், கையெறிகுண்டுகள் 15, ராக்கெட் லாஞ்சர் தோட்டா 2 பெட்டி உள்ளிட்டவை கைப்பற்றபட்டனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#TamilNadu: The Ramanathapuram district police recovered a huge cache of ammunition & explosives buried on the sea shore off Rameswaram island. Police suspect the buried explosives are from the 1980s & belong to Liberation Tigers of Tamil Eelam (LTTE). (25.6.2018) pic.twitter.com/3hijianVNi
— ANI (@ANI) June 26, 2018