தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைமை செயலாளர் பணி என்பது ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்தையும் கவனிக்கும் முக்கிய பணியாகும். ஆனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற இருப்பதால் தலைமை செயலாளர் பணி வேறொவரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன ராவை தமிழக அரசு இன்று நீக்கியது. புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நில நிர்வாகத்துறை ஆணையாளராக பதவியிலுள்ளார். தலைமைச் செயலாளர் பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார். இவர் ஐஏஎஸ் அதிகாரியாக 30 வருட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Girija vaidhyanathan appointed as Tamilnadu Chief secretary - TN Government.
— AIADMK (@AIADMKOfficial) December 22, 2016