Tamil Nadu Lok Sabha Election Result: மத்திய அமைச்சராகும் சௌமியா அன்புமணி?

Tamil Nadu Lok Sabha Election Result: பாஜக கூட்டணியில் உள்ள எந்த வேட்பாளரும் முன்னணியில் இல்லாத நிலையில் பாமகவை சேர்ந்த சவுமியா அன்புமணி மட்டுமே முன்னிலையில் உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 12:46 PM IST
  • சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி.
  • வெற்றி பெரும் பட்சத்தில் வழங்க அதிக வாய்ப்பு.
  • தற்போது தருமபுரியில் முன்னணியில் உள்ளார்.
Tamil Nadu Lok Sabha Election Result: மத்திய அமைச்சராகும் சௌமியா அன்புமணி?  title=

Tamil Nadu Lok Sabha Election Result: தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பல புதிய திருப்பங்கள் ஏற்பட்டது. கடந்த சில தேர்தல்களில் ஒன்றாக பயணித்த அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தனர். அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து தேர்தலை சந்தித்தது. அதேபோல பாஜக கூட்டணியில் பாமக போன்ற சில கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தது.  பாஜக தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபிக்க இந்த தேர்தலில் அதிக மும்முரம் காண்பித்தது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது.

மேலும் படிக்க | Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்முவில் இரண்டு இடங்களில் பாஜக முன்னிலை

அதன்படி இன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுக்க நடைபெற்றது. தமிழகத்தில் காலை முதலே 39 தொகுதிகளிலும் திமுக முன்னணியில் இருந்தது.  பாஜக கட்சியை சேர்ந்த யாரும் இரண்டாம் இடம் கூட பிடிக்கவில்லை.  சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தற்போது முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணியில் 39 தொகுதிகளில் முன்னணியில் உள்ள ஒரே வேட்பாளர் இவர் மட்டுமே. தருமபுரி பகுதிகளில் தங்களது ஜாதி ஓட்டுக்களை மீண்டும் பாமக நிரூபித்துள்ளது. ஒருவேளை சௌமியா அன்புமணி வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் அவருக்கு பாஜக சார்பில் அமைச்சர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளது. 

அப்படி இல்லை என்றால் அன்புமணிக்கு மாநிலங்களவை பதவி கொடுத்து அவர் மீண்டும் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளது.  அதேபோல அதிமுகவும் இந்த முறை தேர்தலில் பெரும் அடி வாங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வேட்பாளர்கள் முன்னணியில் வரவில்லை.  அதிமுக கூட்டணியில் விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் முன்னணியில் உள்ளார்.  தற்போது திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒரு இடங்களிலும், பாஜக கூட்டணி ஒரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லை.

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result 2024:புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News