உள்ளாட்சித் தேர்தல் தேதி: நாளை காலை வெளியீடு?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை காலை வெளியாகவுள்ளதாக மாநில  தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

Last Updated : Dec 1, 2019, 03:56 PM IST
உள்ளாட்சித் தேர்தல் தேதி: நாளை காலை வெளியீடு? title=

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை காலை வெளியாகவுள்ளதாக மாநில  தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய வழக்கை தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நாளை காலை உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News