தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்) முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு (Local Body Elections) தொடங்கியது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக (DMK), அதிமுகவினர் (AIADMK) பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.
ALSO READ | தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்- இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு
இதற்கிடையில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். அதே சமயம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக ஆகிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தேர்தல் அமைதியாகவும், வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளையும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேவைப்படும் போது அங்குள்ள நிலையை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2வது கட்ட தேர்தல் வருகிற 9ம் தேதி நடைபெறும்.
ALSO READ | உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR