TN School Reopening: விரைவில் வெளிவரவுள்ளன வழிகாட்டுதல்கள்!!

பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட, பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான நிபுணர் குழு சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 01:52 PM IST
  • தமிழக அரசு அடுத்த சில நாட்களில், பள்ளிகளை திறப்பது பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை அறிவிக்கும்.
  • செய்வதற்காக பள்ளி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக மாநில அரசு எந்த அவசர முடிவையும் எடுக்காது.
  • கோடை விடுமுறைகளை குறைத்து, கல்வி ஆண்டை மே வரை நீட்டிக்க நிபுணர் குழு திட்டமிட்டுள்ளது.
TN School Reopening: விரைவில் வெளிவரவுள்ளன வழிகாட்டுதல்கள்!! title=

சென்னை: தமிழக அரசு (Tamil Nadu Government) அடுத்த சில நாட்களில், பள்ளிகளை திறப்பது (School Reopening) தொடர்பான ஒரு முடிவை எடுத்து, அதற்கான விரிவான வழிகாட்டுதல்களை (Guidelines) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட, பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான நிபுணர் குழு சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது என்று பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"பல்வேறு வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைக்க குழு பரிந்துரைத்துள்ளது" என்று அந்த அதிகாரி கூறினார். "பொதுத் தேர்வுகளை (Board Exams) எதிர்கொள்ளவுள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிப்பவர்களின் பாடத்திட்டங்கள் சுமார் 40 சதவீதம் குறைக்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் சுமார் 30 சதவீதம் குறைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

குழுவின் மற்றொரு முக்கியமான பரிந்துரை இந்த கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை ரத்து செய்வது பற்றியது. இருப்பினும், போர்டு தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய உயர் வகுப்புகளின் மாணவர்களுக்கு, இறுதித் தேர்வுக்கு முன்னர் இரண்டு ரிவிஷன் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அக்டோபரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் செயல்முறைப் படுத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ALSO READ: செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு - மத்திய அரசு விளக்கம்!!

கோடை விடுமுறைகளை (Summer Vacation) குறைத்து, கல்வி ஆண்டை மே வரை நீட்டிக்க நிபுணர் குழு திட்டமிட்டுள்ளது.  பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சரியான தேதி மாநில அரசால் தீர்மானிக்கப்படும். மூத்த மாணவர்களுக்கான வகுப்புகள், அதாவது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, முதலில் தொடங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை சேகரித்த பின்னர் குழு தனது அறிக்கையைத் தயாரித்தது. இந்த அறிக்கை பள்ளி கல்வி அமைச்சர் மட்டுமல்லாமல், முதல்வராலும் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, பின்னர் ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பாக மாநில அரசு எந்த அவசர முடிவையும் எடுக்காது என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார்.

கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், அனைத்து பள்ளிகளும் முறையாக சுத்திகரிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமரன் கூறினார். கூடுதலாக, மாணவர்களுக்கு ஃபேஸ்மாஸ்க்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து பள்ளிகளும் காலால்-இயக்கப்படும் கை சுத்திகரிப்பு கருவிகள் நுழைவாயிலில் வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தனி மனித இடைவெளியை (Social Distancing) பராமரிக்க, பள்ளிகள் மைக்ரோ கற்பித்தல் முறையை (அதிகபட்சம் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்) பின்பற்ற வேண்டும் என்றார் அவர். இருப்பினும், அமர்வைத் தொடங்குவதற்கு முன், மாணவர்களுக்கு அவர்களின் அச்சங்களைத் தீர்க்க ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் இளமரன் சுட்டிக்காட்டினார்.

ALSO READ:NEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்!!

Trending News