பத்திரப்பதிவில் சேவை கட்டணம் உயர்வு... ஜூலை 10 முதல் அமல் - மாற்றங்கள் என்னென்ன?

TN Registration Service Fee Increased: பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது அதன் கட்டணங்கள் உயர்த்துப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2023, 06:43 PM IST
  • சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களில் திருத்தம்.
  • கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களில் திருத்தம்.
  • கட்டணம் உயர்வு அரசுக்கு வருவாயை உயர்த்தும் எனவும் கூறப்படுகிறது என கூறப்படுகிறது.
பத்திரப்பதிவில் சேவை கட்டணம் உயர்வு... ஜூலை 10 முதல் அமல் - மாற்றங்கள் என்னென்ன? title=

TN Registration Service Fee Increased: பதிவுத்துறை சேவை கட்டணங்களை உயர்த்துவதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு மேல் அதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளரான பா.ஜோதி நிர்மலாசாமியிடம் இருந்து வெளியிடப்பட்டது. 

அந்த அறிக்கையில்,"பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் அதில்,"சேவை கட்டணத்தை உயர்த்தும் முடிவின் அடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முந்தைய நாள் இரவே தற்கொலைக்கு தயாரானாரா டிஐஜி விஜயகுமார்...? - பரபரப்பு தகவல்

உதாரணத்திற்கு, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகும் எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அதிகபட்ச முத்திரை தீர்வை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாகும் எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகும் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், வீடு, நிலம் போன்றவற்றை பத்திர பதிவு செய்யும் நபர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. இதில், தனி மனை பதிவு கட்டணம் 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கு மாற்றப்பட்டதை இங்கு கவனிக்கத்தக்கது. இது பொதுமக்களுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து பொருள்களின்/சேவைகளின் கட்டணங்களும் வானளவு உயர்ந்துவிட்ட நிலையில், பத்திர பதிவில் மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன்பான கட்டணங்களை நடைமுறையில் வைத்திருப்பது எவ்விதத்திலும் சரியாக இருக்காது எனவும் கூறப்படுகின்றன. அதுமட்டுமின்றி, பத்திர பதிவில் சேவை கட்டணம் உயர்வு அரசுக்கு வருவாயை உயர்த்தும் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டி என அண்ணாமலை ஒப்புக்கொள்கிறாரா? ஆர்.எஸ் பாரதி
 

Trending News