தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை ஒரே நாளில் கைது செய்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 12, 2023, 09:16 AM IST
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்..! title=

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | வந்துவிட்டது பிரியாணி ATM... அதுவும் சென்னையில் - இனி எப்போதும் சுட சுட சாப்பிடலாம்!

மீனவர்கள் 16 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான இந்த அத்துமீறல் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழக மீனவர்கள் பலர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 16 பேர் இப்போது சிறையில் அடைக்கப்பட இருக்கின்றனர். 

இது குறித்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க பல முறை வலியுறுத்தியும், நிவாரணம் கிடைத்ததாக தெரியவில்லை என மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கு இது குறித்து பலமுறை கடிதம் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | CPCL: நாகூர் பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு! மக்கள் பீதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News