தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் கலந்தாய்வு மூலம் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பார்கள் என்ற எண்ணத்த்தில், இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஐந்து கட்டங்களாக நடைபெறும்.
வரும் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்வைப்பு தொகையாக ரூ.5000 செலுத்த வேண்டும்.
எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். முன்வைப்பு தொகை திருப்பித்தரப்படும்.
பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் மூலம் கலந்தாய்வு இன்று முதல் அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடக்க உள்ளது.