மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த அதிகபட்ச தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதுறாக பேசியதாக குஜராத் பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்ட ஒரே வழக்கு ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட இந்த வழக்கு அமைந்தது. இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்பி பதவியை இழந்த ராகுல் காந்தி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
அங்கும் சூரத் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, ராகுல்காந்தியின் மேல்முறையிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை கீழமை நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கவில்லை எனக் கூறி தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் எம்பியான ராகுல்காந்தி விரைவில் நாடாளுமன்றம் செல்ல இருக்கிறார். இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியும் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி வென்றுள்ளது. நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாப்பதையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ராகுல் காந்தி உடனே நாடாளுமன்றம் செல்ல முடியுமா? அந்த உத்தரவு வர வேண்டும்
ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் என்ன நடந்தாலும், என்னுடைய கொள்கை மாறாது, இந்தியாவை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.
Come what may, my duty remains the same.
Protect the idea of India.
— Rahul Gandhi (@RahulGandhi) August 4, 2023
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ