அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான்: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

Tamil Nadu CM MK Stalin on Human Rights: அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான். பல்வேறு உரிமைகளை பற்றி அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 6, 2022, 12:53 PM IST
  • தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
  • உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கெளரவ விருந்தினராக பங்கேற்றார்.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான்: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் title=

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கெளரவ விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘சட்டத்தின் ஆட்சியை நீதியின் மூலம் நிலைநாட்டி அமைதி பூங்காவாக தொடர்ந்து இருக்க வைத்துள்ளார் முதல்வர். மனித உரிமை அவரவர் பிறப்புரிமை, அதை மதித்து நடப்பது அனைவரின் கடமை. எல்லோருடைய மனித உரிமையை காக்க திராவிட மாடல் அரசு உறுதிப்பூண்டுள்ளது.

மனித உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் இருந்தால் அதை காப்பாற்றும் பாதுகாவலராக முதல்வர் விளங்குகிறார். சிறந்த முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே நன்மை பயக்கும். இது மதசார்பற்ற நாடு. இங்கு அனவர்து பண்பாடும் காக்கப்படும்.’ என்று கூறினார்.

மேலும் படிக்க | போதை பொருள் ஒழிப்பு - எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் கடிதம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அளித்த உரையில், ‘மனித உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் பல்வேறு வழிமுறைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனித உரிமைகளை காப்பாற்ற மக்கள் உயர்நீதிமன்றத்திற்கு வருவார்கள். இந்த நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும். இதனை தடுக்க வேண்டும். மனித உரிமைகள் குறித்து அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மனித உரிமைகள் ஆணையத்தை உருவாக்கியவர் கலைஞர். மனித உரிமை காக்கும் மாண்பாளர் கலைஞரை நினைவு கூறுவது இந்த திட்டத்தில் பொருத்தமாக இருக்கும். சுயமரியாதை ஒவ்வொரு மனிதனுக்கும் உயிரினும் மேலானது. தனி மனிதனின் சுயமரியாதை எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்பட கூடாது என உறுதியாக உள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான்.

பல்வேறு உரிமைகளை பற்றி அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. அந்த கடமையில் இருந்து ஒருபோதும் தவறமட்டோம். நீதித்துறையின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். சேம நிதி 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. நீதிமன்ற கட்டிடம் வழங்க 4 ஏக்கர் நிலம் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

 மாநில மனித உரிமை ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். எண்ணிக்கை அதிகரிக்கப்படும். விசாரணை குழுவில் காவல்துறை எண்ணிக்கை அதிகரிக்க முடிவெடுக்கப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். கொள்கை கோட்பாடுகள் குறித்து அனைவரும் அறிய பயிற்சி முகாம் ஏற்படுத்தப்படும்.

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன். உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன் வைத்தது தான். சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூக நீதியின் அரசாங்க அமையும் அரசுதான் மக்களின் அரசாக அமைய முடியும். மாநில மனித உரிமை சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும்’ என கூறினார். 

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா,   தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின தலைவர் நீதிபதி பாஸ்கரன், ஆணையத்தின் உறுப்பினர்கள், செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க |  போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை உறுதிப்படுத்துங்கள் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News