பெண்களின் சுயாதிகாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெண்களால் இயக்கப்படும் 13 வகையான சூரிய மற்றும் மின்சாரத்தால் இயங்கும் ஆட்டோக்களை தமிழக முதல்வர் கே பழனிசாமி (K Palanisamy) திங்கள்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த திட்டம் தமிழகத்திற்கு முதலீட்டைப் பெறுவதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தனது வெளிநாட்டு பயணத்தின்போது, பழனிசாமி அவர்கள் துபாயில் எம் ஆட்டோவுடன் (M Auto) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சார்ஜிங் நிலையங்கள், உற்பத்தி அலகுகள் போன்றவற்றை வழங்குவதில் தனது அரசாங்கங்கம் ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். செயல்பாட்டைத் தொடங்க உரிமம் பெற்ற முதல் நிறுவனம் எம் ஆட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தமிழகத்தின் 6 நகரங்களில் Electric Vehicle charging நிலையங்கள் அமைக்கப்படும்: TN Govt
சுமார் 100 கோடி முதலீட்டை உள்ளடக்கிய இந்த திட்டம் 5,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ், சிசிடிவி கேமராக்கள், பீதி பொத்தான் (Panic Button) மற்றும் tab-கள் பொருத்தப்பட்ட இந்த ஆட்டோக்கள் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டேர் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது. இந்த அம்சங்கள் பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படலாம். ஓட்டுநர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருப்பார்கள்.
வெளியீட்டு நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைவர் மன்சூர் அலிகான் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யஸ்மீன் ஜவஹர் ஆகியோர் பங்கேற்றனர்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவையும் உள்ளடக்கிய தனது பயணத்தின்போது, முதல்வர் பழனிசாமி 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இவை மொத்தமாக 8,835 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டவை. இந்த திட்டங்கள் 35,520 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: தமிழகத்தில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார் எம். வீரலட்சுமி!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR