நடமாடும் அம்மா உணவகங்களை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!

தற்போது 3 நடமாடும் உணவகங்கள் துவக்கி வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அனைத்து மண்டலங்களிலும் மொபைல் கேன்டீன்கள் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2020, 04:59 PM IST
  • 'அம்மா உணவகம்' மறைந்த முதல்வர் ஜே.ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்ட ஒரு முயற்சியாகும்.
  • அம்மா உணவகங்களின் அடுத்த கட்டம், ‘மொபைல் அம்மா உணவகங்கள்'.
  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று நடமாடும் அம்மா உணவகங்களை துவக்கி வைத்தார்.
நடமாடும் அம்மா உணவகங்களை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!! title=

சென்னை: 'அம்மா உணவகம்' என்பது மறைந்த முதல்வர் ஜே.ஜெயலலிதாவால் (J Jayalalitha) முன்மொழியப்பட்ட ஒரு முயற்சியாகும். இது 2013 ஆம் ஆண்டில், தரமான உணவை மானிய விலையில் வழங்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது. அம்மா உணவகம் திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

COVID-19 லாக்டௌனில் கூட, இந்த உணவகங்கள் மானிய விலையில் உணவை அளிக்க அனுமதிக்கப்பட்டன. மேலும் அனைத்து உணவகங்களும் உணவு நிலையங்களும் இந்த நேரத்தில் மூடப்பட்டிருந்ததால், தினசரி கூலி வேலை செய்பவர்களுக்கு அம்மா உணவகங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருந்தன.

அம்மா உணவகங்களின் (Amma Canteen) அடுத்த கட்டமாக, தமிழக அரசு இப்போது ‘மொபைல் அம்மா உணவகங்களை’ பற்றி அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palanisamy) அவர்கள் இன்று நடமாடும் அம்மா உணவகங்களை துவக்கி வைத்தார். இவற்றில் அம்மா உணவகங்கள் வாகனங்களில் செயல்படும். பல்வெறு இடங்களுக்கு செல்லும் இந்த நடமாடும் உணவகங்கள் மானிய விலையில் உணவை வழங்கும். எனினும் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் முக்கியமாக கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லும்.

ALSO READ: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 11-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை

வடக்கு சென்னை, மத்திய சென்னை மற்றும் தெற்கு சென்னை என இம்மூன்று பகுதிகளுக்கும் தலா ஒரு நடமாடும் உணவகம் என்று, தற்போது 3 நடமாடும் உணவகங்கள் துவக்கி வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அனைத்து மண்டலங்களிலும் மொபைல் கேன்டீன்கள் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடமாடும் அம்மா உணவகங்கள் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை காலை உணவுக்காக செயல்படும் என்றும் மதிய உணவு நேரம் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இருக்கும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பார்சல் சேவை எதுவும் இல்லை என்றாலும், மொபைல் அலகு, உள்ளமைக்கப்பட்ட கை கழுவும் வசதிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் வசதியுடன் உள்ளது.

முன்னதாக, அம்மா உணவகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து, மொபைல் அலகுகள் வாங்குவதற்கும், இயங்கும் அலகுகளை மேம்படுத்துவதற்கும் குடிமை அமைப்பு சுமார் ரூ .100 கோடி செலவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: மீனவர்களுக்கான முதல் ரேடியோ சேனலை தொடங்கியுள்ளார் ராமநாதபுரத்து மீனவர்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News