சென்னை: தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 23-ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 23-ம் தேதி துவங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதிப்படுத்தி சட்டசபை செயலர் ஜமாலுதீன் இன்று அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவை வரும் 23-ம் தேதி கூடுகிறது, ஆளுநர் உரையுடன் 23-ம் தேதி சட்டமன்றப் பேரவை கூடுகிறது.
— AIADMK (@AIADMKOfficial) January 12, 2017
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.