TN Assembly முதல் கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம்

தமிழக சட்டசபை வரும் 21 ஆம் தேதி துவங்கவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கவிருக்கும் சட்டசபையில் முதலில் தமிழக ஆளுநர் உரையாற்றுவார். கொரோனா காலத்து சட்டமன்ற நிகழ்வுகள் சில வகைகளில் மாறுபட்டிருக்கும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 01:34 PM IST
  • தமிழக சட்டசபை வரும் 21 ஆம் தேதி துவங்கவுள்ளது.
  • சட்டசபையில் கலந்துகொள்ளும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயம்
  • சட்டமன்றத்தின் பல்வேறு பணிகளுக்காக வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
TN Assembly முதல் கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் title=

சென்னை: தமிழக சட்டசபை வரும் 21 ஆம் தேதி துவங்கவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கவிருக்கும் சட்டசபையில் முதலில் தமிழக ஆளுநர் உரையாற்றுவார். கொரோனா காலத்து சட்டமன்ற நிகழ்வுகள் சில வகைகளில் மாறுபட்டிருக்கும்.

சட்டசபையில் (TN Assembly) கலந்துகொள்ளும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயமாக செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. முதல்வரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். திமுக-வின் மு.அப்பாவு சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில், தமிழகத்தின் 16 அவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் 21 ஆம் தெதி தொடங்கவுள்ளது. இதை நேற்று தெரிவித்த சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு, ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் என கூறினார். 

ALSO READ: Tamil Nadu: பொது மக்கள் புகார் அளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் துவக்கம்

இது பற்றியும், இது கொரோனா காலத்து  (Corona Virus) சட்டசபை கூட்டத்தொடர் என்பதால், சட்டசபை கூடும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

"தமிழக சட்டசபையில் 21 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆளுநர் உரையாற்ற உள்ளார். அவர் உரை ஆற்றிய பிறகு, சட்டமன்ற அலுவல் குழு கூட்டம் நடைபெறும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும், என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றி அதில் முடிவு செய்யப்படும். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டமன்ற கூட்டத் தொடர், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும். சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கு பணியாற்ற வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். சோதனை முடிவுகளில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும்மே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோன தொற்று பரவல் குறித்த முன்னெச்சரிகை நடவடிக்கையாக, சட்டசபையில் இருக்கைகள் அனைத்தும் சமூக இடைவெளியுடன் போடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று இன்னும் நம்மிடையே இருக்கும் காரணத்தால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். 

சட்டசபை இயக்கம் பற்றியும் அனைத்து கட்சிகளுக்கும் அளிக்கப்படும் வாய்ப்புகள் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், " சட்டமன்றத்தில் ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அனைத்து கட்சியினருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜனநாயக முறையில் அவை நடத்தப்பட வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் (MK Stalin) எண்ணம். அந்த அடிப்படையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடர் அனைத்தும் நடைபெறும். ஆளுநர் உரை முடிந்த பின்னர், அடுத்த நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். அதில் விவாதிப்பதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்." என்று அவர் மேலும் தெரிவித்தார். 

சட்டமன்றத்தின் பல்வேறு பணிகளுக்காக வருபவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், அவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இருக்குமா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் ஏதும் வரவில்லை. 

ALSO READ:TN Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News