தமிழகத் தேர்தல் முடிவுகள்: கோட்டையை பிடிப்பது யார்? கோட்டை விடுவது யார்?

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், திராவிடக் கட்சிகளைத் தாண்டி சிந்திக்க தயாராக உள்ளார்கள் என பல பேச்சுகள் இருந்தன. எனினும், கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றே சுட்டிக்காட்டுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2021, 12:38 PM IST
  • தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்தன.
  • மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.
  • கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக வெற்றியை நிச்சயப் படுத்துகின்றன.
தமிழகத் தேர்தல் முடிவுகள்: கோட்டையை பிடிப்பது யார்? கோட்டை விடுவது யார்?  title=

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. தேர்தல் பரப்புரைகள், பேரணிகள், குற்றச்சாட்டுகள், விமர்சன பேச்சுகள் என கொரோனா காலத்திலும் களை கட்டியிருந்தது தேர்தல் களம். தேர்தல் முடிந்த பின்னர், புயலுக்கு முந்தைய அமைதியைப் போல அமைதி நிலவியது. கொரோனா காரணமாக போடப்பட்ட கட்டுப்பாடுகளால், அமைதி இன்னும் ஆழமானது.

தற்போது நாளை (மே 2) தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், மீண்டும் சலசலப்பு துவங்கிவிட்டது. கொரோனா (Coronavirus) கட்டுப்பாடுகள் காரணமாக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள், பட்டாசு சரவெடிகள் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், நேற்று முன்தினம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தவுடன் மக்களிடையே மீண்டும் அரசியல் பேசும்பொருளாகி விட்டது.

மீண்டும் துவங்கியது தேர்தல் சலசலப்பு

கொரோனா கொடூரம் பற்றியே கேட்டுக்கொண்டிருந்த காதுகளில் கோட்டையைப் பிடிப்பது யார் என்ற கேள்விகள் கேட்கத் துவங்கிவிட்டன. தமிழகத்தின் (Tamil Nadu) அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் ஒரு நாளில் தெரிந்துவிடும். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் அடங்கியிருந்த அரசியல் களம், தற்போது மீண்டும் ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளது. 

ஒரே கோணத்தில் கருத்துக்கணிப்புகள்

வியாழனன்று வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக (DMK) வெற்றியை நிச்சயப் படுத்துகின்றன. திமுக-வோ கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் மனதளவில் தொடங்கியிருக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டையைப் பிடிக்கப்போகும் வெற்றிக் களிப்பில் திமுக தரப்பிற்கு இந்த இரண்டு நாட்கள் நன்றாகவே கழியும்.

ALSO READ: அமோக வெற்றி பெற்று கோட்டையை பிடிக்கிறது திமுக: கருத்துக்கணிப்புகளில் clean sweep

மறுபுறம், கருத்துக்கணிப்பு வேறு, களம் வேறு என்ற எண்ணத்தில் உறுதியாக நிற்கிறது அதிமுக. தாங்கள் செய்துள்ள மக்கள் நலட்திட்டங்களின் மேல் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ள அக்கட்சி, மக்களும் அவற்றை மறந்திருக்க மாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளது. கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அவர்களது உறுதியை தளர்த்தியதாகத் தெரியவில்லை. பீகார் போன்ற ஒரு ஆச்சரியத்தை இங்கும் எதிர்பார்க்கிறது அதிமுக.

பெயருக்கு ஐந்துமுனைப் போட்டி, நிஜத்தில் இருமுனைப் போட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல், இம்முறை ஐந்துமுனைப் போட்டியாக உள்ளது என கூறப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம ஆகிய கட்சிகள் அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளுடனும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை எதிர்கொண்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், திராவிடக் கட்சிகளைத் தாண்டி சிந்திக்க தயாராக உள்ளார்கள் என பல பேச்சுகள் இருந்தன.

எனினும், கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றே சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் முடிவுகள் வந்தால்தான் உண்மை நிலைமை புலப்படும் என்ற போதிலும், முக்கிய போட்டி அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான் என்பது கருத்துக்கணிப்பில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

ALSO READ: நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என அதிமுக நம்பிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News