Tamil Nadu Assebly Election Results 2021: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வரவுள்ள நிலையில், அரசியல் களம் களைகட்டியுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளில், திமுக அதிகப்படியான இடங்களில் முன்னிலையில் உள்ளது தெரிய வருகிறது.
சில தொகுதிகள் தேர்தல் திருவிழாவின் துவக்கம் முதலே மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. அவற்றில் சென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதியும் ஒன்றாகும்.
ஆயிரம் விளக்கு - குஷ்பு பின்னடைவு
ஆயிரம் விளக்கு தொகுதியில் சமீபத்திய நிலவரப்படி, திமுக வேட்பாளர் டாக்டர் முகிலன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போராடிய பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டாக்டர் எழிலன் இதுவரை 3330 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், குஷ்புவிற்கு 1393 வாக்குகள் கிடியத்துள்ளன.
ஹெச். ராஜா பின்னடைவு
காரைக்குடியில், பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா 1393 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 2805 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ராஜேந்திர பாலாஜிக்கு பின்னடைவு
ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் 4516 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு 2016 வாக்குகள் பெற்று அவருக்கு பின்னால் உள்ளார்.
சீமான் பின்னடைவு:
அதேபோல் திருவொற்றியூர் தொகுதியிலும் திமுக வேட்பாளர் சங்கர் தொடந்து முன்னிலயில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு பின்னடைவு.
இந்த சட்டமன்றத் தேர்தல் பல வகைகளில் வேறுபட்டிருந்தது. பல புதிய முகங்களையும், கட்சிகளையும் இம்முறை காண முடிந்தது. காட்சிப்பொருட்களாக மட்டுமல்லாமல், இக்கட்சிகள் வலுவான போட்டிகளாகவும் உருவெடுக்கும் வல்லமை படைத்தவையாகத் தோன்றின. பரப்புரைகளில் புதிய முகங்களுக்கும், புதிய கூட்டணிகளுக்கும், புதிய கட்சிகளுக்கும் கூடிய மக்கள் கூட்டம் அதை உறுதிப்படுத்தியது. இவற்றின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR