தோல்வியில் வெற்றியைக் காணும் வினோத வேட்பாளர்: இரு முதல்வர்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறார்

தமிழக முதல்வர் கே.பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து கண்ணூரில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியிலும், தான் வசிக்கும் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலும் பத்மராஜன் போட்டியிடுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2021, 10:32 AM IST
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது.
    தேர்தலில் தோற்பதற்காகவே போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் இம்முறையும் தேர்தல் களத்தில் உள்ளார்.
    தமிழக மற்றும் கேரள முதல்வர்களை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
தோல்வியில் வெற்றியைக் காணும் வினோத வேட்பாளர்: இரு முதல்வர்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறார் title=

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் களம் களைகட்டியுள்ள தமிழகத்தில் வினோதங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வினோதமான வேட்பாளரைப் பற்றி இங்கே காணலாம்.

"வெற்றி என்பது உற்சாகத்தை இழக்காமல் ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு செல்லும் திறன்" என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறியுள்ளார். இந்த வார்த்தைகள்தான் ’எலக்‌ஷன் கிங்’ அதாவது தேர்தல் மன்னர் என்றழைக்கப்படும் கே. பத்மராஜனுக்கு உந்துதலாக அமைகின்றன. இவரைப் பொறுத்தவரை தோற்பதுதான் வெல்வது. 61 வயதான இந்த சுயேட்சை வேட்பாளர் இந்த முறை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மூன்று வெவ்வெறு தேர்தல் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். அவரது குறிக்கோள் - தோற்பது!! ஆம்!! ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. 1988 ஆம் ஆண்டு தான் பங்கேற்ற தனது முதல் தேர்தல் போட்டியிட்டதிலிருந்து இதுதான் அவரது குறிக்கோளாக இருந்து வருகிறது. 

அவர் தேர்தலில் யாரையெல்லாம் எதிர்த்து போட்டியிட்டிருக்கிறார் என்பதே ஒரு சுவாரசியமான விஷயமாகும். வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன் சிங், ஜெயலலிதா, கருணாநிதி, ஏ.கே. ஆண்டனி, எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த், சோனியா காந்தி, ராகுல் காந்தி என இப்படிப்பட்ட பல வி.ஐ.பி வேட்பாளர்களை எதிர்த்து அவர் போட்டியிட்டுள்ளார். இந்த பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த முறை கேரளா மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும், வழக்கம்போல, அவர் போட்டியிட மிகப் பெரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை (K Palaniswami) எதிர்த்து எடப்பாடியிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து கண்ணூரில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியிலும், தான் வசிக்கும் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலும் பத்மராஜன் போட்டியிடுகிறார். 

Image preview

ALSO READ: தேர்தல் வினோதங்கள்: தமிழகத்தின் இந்த வாக்குச்சாவடியை அடைய கர்நாடகா வழியாக செல்ல வெண்டும்!!

தேர்தலை (TN Asembly Election) எதிர்கொள்ள தனது 217 வது வேட்புமனுவை தாக்கல் செய்த பத்மராஜன், இம்முறையும் தேர்தலில் தோல்வியுற்று தனது அடுத்த மைலக்கல்லை எட்டுவேன் என நம்பிக்கை கொண்டுள்ளார்.  இந்தியாவில், குடியரசுத் தலைவர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ, சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கோ, எந்த பதவிக்கு வேண்டுமானாலும், சாதாரண குடிமக்களும் போட்டியிடலாம், எவ்வளவு பெரிய மனிதர்களையும் எதிர்த்து போட்டியிடலாம் என்பதை மக்களுக்கு நிரூபிக்கவே தான் இவ்வாறு செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அரசியல் என்பது பொதுமக்களுக்கு எட்டாத கனி அல்ல என்பதை தன் மூலம் விளக்குவதே அவரது நோக்கம். தான் ஒவ்வொரு முறை தோவியுற்றாலும், இதன் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், அவர் இதில் வெற்றி பெற்றதாகவே எண்ணுகிறார். 

கடந்த 33 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ச்சியாக தோற்பதற்காகவே ரூ .50 லட்சத்துக்கு மேல் செலவழித்த பத்மராஜன், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உட்பட பல சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார்.

"நான் தான் உலகின் ஒரே தேர்தல் மன்னன்" என்று பத்மராஜன் பெருமையுடன் அறிவிக்கிறார். ’Election king Failure Party' அதாவது, ‘தேர்தல் மன்னன் தோல்விக் கட்சி’ என்ற தனது கட்சியை பதிவு செய்ய அவர் இந்திய தேர்தல் ஆணையத்தையும் (Election Commission) அணுகியுள்ளார். தனது தொடர்ச்சியான தோல்வி ஒரு நாள் உலக சாதனைகளின் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ALSO READ: Puducherry Assembly Elections 2021: புதுச்சேரியில் மார்ச் 30-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News