Chennai Green Run Marathon: உலக சுற்றுச்சூழல் தினத்தை நாளை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டும், மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 'கிரீன் ரன் மாரத்தான்' போட்டி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகை ஷாக்க்ஷி அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் பெரியவர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மௌன அஞ்சலி
மேலும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. தொடந்து நேற்று முன்தினம் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஷாக்க்ஷி அகர்வால்,"இது ஒரு நல்ல முயற்சி. பசுமை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது நடிகர் விவேக் சார் தான். ஏன் என்றால் இந்த பசுமையை அவர்தான் துவங்கி வைத்தார். பசுமை தொடர்பாக பல விஷயங்களை அவர்கள் செய்துள்ளார். அது எல்லாம் எனக்கு நியாபகம் வருகிறது.
இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தினமும் ஒரு மரகன்று நடவேண்டும் என்ற முயற்சியை அனைவரும் எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் பசுமையுடன் வாழலாம், நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கும். இது நமக்கும் மட்டுமல்ல நம்மளுடைய அடுத்த தலைமுறைக்கும் முக்கியமான ஒன்றாகும். இது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
மேலும் படிக்க | ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள்
நாட்டுக்கு அது தான் அல்லது
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷாக்க்ஷி அகர்வால் இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் நமது நாட்டிற்கு நல்லது என்று தெரிவித்தார்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராாட்டம் தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துன்புறுத்தலுக்கு ஆளான வீராங்கனைகள்
கூட்டமைப்பின் ஆதரவுபெற்ற சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடக்கின்றனர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
சாக்ஷி மாலிக் கூறியது
டோக்யோ ஒலிம்பிக் போட்டி தோல்விக்கு பின்னர், என்னை அவர் எதற்கும் பயனற்றவர் என்று அழைத்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள ரீதியாக என்னை துன்புறுத்தியது. என் வாழ்வை முடித்துகொள்ளலாமா என்று ஒவ்வொரு நாளும் எண்ணத் தொடங்கினேன். எந்த மல்யுத்த வீரர்களுக்கு எதாவது ஆனாலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு. பெண்கள் மல்யுத்த வீரர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய 10-20 சம்பவங்கள் எனக்குத் தெரியும்.
இதில் பல பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். எந்த ஒரு விளையாட்டு வீரரும் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்
புகார் அளிக்க வேண்டும்
மாரத்தான் போட்டி குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியா கூறுகையில்,"உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னேற்றம் மட்டுமே மரம் கண்டுகளை வச்சிரோமே தவிர மற்ற நாட்களில் இது போன்ற செடிகள் மற்றும் மரங்களை நடுவதில்லை. மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு. மரம் என்பது நமது வாழ்க்கையில் ஒருவர் மரம் வேறு மனிதன் வேறு கிடையாது, மரங்களை வெட்டுவதை தவிர்ப்பதற்கு நம்மளால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்
அதை மீறி மரங்களை வெட்டினால் சரியாக கண்காணித்து அரசிடம் புகார் அளிக்க வேண்டும். மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது" என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ