விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி இப்போது வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்திருப்பவர் நடிகர் பாலா. இவரிடம் டைமிங் காமெடி, நக்கல் கேலி கிண்டல்கள் எல்லாம் எப்போதும் யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரல் தான். அதைவிடவும் இவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவி சமூகத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாகியுள்ளது. ஆம், நடிகர் பாலா தனக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதியை தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கென்றே செலவழித்துக் கொண்டிருக்கிறார். நோய்வாய்பட்ட மக்களுக்கு மருத்துவச் செலவு, தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி, முதியோர்களுக்கு உணவு, தங்குவதற்கு இருப்பிடச் செலவுக்கு நிதியுதவி என கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!
அண்மையில் மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் பரிசாக கொடுத்தார். ஏழைக் குழந்தைகள் தங்கும் சிறப்பு விடுதிகளுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொடுப்பதை தினசரி பழக்கங்களில் ஒன்றாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார் அவர். சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது தன்னால் இயன்ற ஒரு தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுத்தார். இதற்கு ஒருபுறம் அவரை பாராட்டுபவர்கள் இருந்தாலும், விளம்பரத்துக்காக செய்கிறார் என்ற விமர்சனத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் இது குறித்து கவலைகொள்ளவில்லை என தெரிவித்த பாலா, என்னால் என்ன முடியுமோ அதனை செய்வேன் என தெரிவித்துவிட்டு, தன்னுடைய வழக்கமான பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார். அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தபோது, தன்னுடைய அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவருக்கே உரிய காமெடியில், பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட எனக்கு தெரியாது நான் எங்க இருந்து பொலிட்டிக்கல் வர போறேன் என தெரிவித்திருக்கிறார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் பகுதியில், கிரிக்கெட் வீரர்கள் ஒருங்கிணைந்து குடியாத்தம் பிரீமியர் கிரிக்கெட் லீக் (GPCL ) என்ற அமைப்பை தொடங்கி, இதில் 12 அணிகள் சேர்க்கப்பட்டு சுமார் 200 இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று கடந்த மூன்று மாதங்களாக 75 போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு நடிகர் பாலா சிறப்பு அழைப்பாளராக வந்தார். அப்போது, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " மழை வெள்ளத்தில் தன்னால் முடிந்தவற்றை நான் உதவி செய்தேன். மற்றவர்கள் உதவி செய்யவில்லை என கூறும் தகுதி எனக்கு இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. எனக்கு எந்த கட்சியும் தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே கட்சி எனது தங்கச்சி
என நகைச்சுவையாக கூறினார். மேலும் பேசிய பாலா, பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட தெரியாது நான் எங்க இருந்து பொலிட்டிகளில் வருவேன் என கூறிச் சென்றார்.
மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ