இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் படம்தான் 'மாநாடு'. ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல சிக்கல் ஏற்பட்டது. நவம்பர் 24-ம் தேதி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் 'மாநாடு' படத்திற்கு ஏகப்பட்ட பைனான்ஸ் பிரச்சனை, பண சிக்கல் இருப்பதாகவும் வேறு வழியில்லாததால் பெருத்த வலியோடு படம் நாளைய தினம் வெளியாகாது. படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கிறேன், என்று அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் டுவீட் செய்தார்.
ALSO READ | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் வெளியீடு!
இந்நிலையில் 'மாநாடு' படத்தை வெளியிட உலகெங்கிலும் காத்திருந்த திரையரங்க உரிமையாளர்களும், படத்தை வாங்கியிருந்த வினியோகஸ்தர்களும், சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வினியோகஸ்தர் சங்க தலைவராகவும் இருக்கக்கூடிய டி.ராஜேந்தர் அவர்களை தொடர்பு கொண்டு எப்படியாவது தலையிட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் விநியோகஸ்தர்களுக்கும், மாநாடு படத்தை வெளியிட உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கும் கை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டி.ராஜேந்தர் மற்றும் சிம்புவின் தாயாரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் உஷா ராஜேந்தர் அவர்களும் இணைந்து படத்தை கொண்டு வர களமிறங்கி அன்று விடிய விடிய கொட்டும் மழையையும் மீறி போராடி வந்தனர். நவம்பர் 25-ம் தேதி காலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 5 மணி காட்சி பல திரையரங்குகளில் ரத்தாகி ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. இந்த பதட்டமான சூழ்நிலையில் படத்தின் பைனான்சியர் உத்தமன் சந்த் அவர்களுடைய கணக்கில் மாநாடு படத்தின் நெகட்டிவ் மீது 5 கோடி பாக்கி தொகை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரவேண்டும். இந்த படத்தின் சாட்டிலைட் விற்காத காரணத்தால் இன்றைய நிலையில் சாட்டிலைட் மதிப்பான 5 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. இதனை டி.ராஜேந்தர் பொறுப்பேற்றுக் கொண்டு அவரது மகன் T.R.சிலம்பரசன் நடித்து ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் வெளியீட்டின்போது தருவதாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
மேலும் சாட்டிலைட் உரிமையை விற்று ஒருவேளை படம் 5 கோடிக்கு கீழே விற்றால் குறைவது எத்தனை கோடி ஆனாலும் அதனை டி.ராஜேந்தர் தான் தர வேண்டும் என்று உத்தரவாத கடிதத்தை உத்தம சந்த் அவர்களே தன் கைப்பட எழுதி டி.ராஜேந்தரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கையொப்பமிட மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு.சௌந்தரபாண்டியன் சாட்சி கையொப்பமிட அந்த உத்தரவாத கடிதத்தை பெற்றுக்கொண்டு 8 மணி காட்சிக்கு தான் 'மாநாடு' படத்தை வெளியிட்டனர். ஆனால் இந்தப் படம் வெளியாகாது என்று தயாரிப்பாளர் டுவிட்டரில் அறிவித்த பின்னும் டி.ராஜேந்தரின் அவரது மனைவி உஷா ராஜேந்தரும் போராடி அதற்குப்பின்னால் எல்லாம் வல்ல இறைவன் அருளால் படம் வெளியாகி வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெற்றி பெற்ற காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் தருணத்தில் படத்தின் பைனான்சியர் உத்தமசந்த் அவர்களும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களும் டி.ராஜேந்தர் அவர்களுக்கு தெரிவிக்காமலேயே சில தனியார் தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் உரிமையை விற்பதற்கு முற்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் சென்னை 20வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் 'மாநாடு' திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கனம் நீதிபதி அவர்கள் முதல் பிரதிவாதி உத்தம்சந்த் அவர்களும், இரண்டாவது பிரதிவாதி மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களும் உரிய பதில் அளிக்குமாறு வழக்கை டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
ALSO READ | ’சிம்பு, வெங்கட்பிரபு அட்ரஸ் வேனுமா?’ பிரேம்ஜி டிவிட், எஸ்.ஜே.சூர்யா ரியாக்ஷன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR