காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பிணை நாங்கள் மதிக்கிறோம் என்று தமிழ்நாடு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்,.
இது தொடர்பாக அவர் கூறுகையில்;- காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பிணை நாங்கள் மதிக்கிறோம். இதற்கு தமிழ்நாடு அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
என்னினும், தமிழகத்திற்கான காவேரி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
We believe in verdict of the court & respect it. Surely, this is not enough. We have raised the shortfall of water with Union Minister Nitin Gadkari who have two plans to address the issue, one of which is linking river Godavari with Kallanai: A Navaneethakrishnan #CauveryVerdict pic.twitter.com/tCwES1hfv2
— ANI (@ANI) February 16, 2018
காவிரி நீர் பிரச்சனை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன.
செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக தற்போது தீர்ப் வழங்கிய உச்சநீதிமன்றம் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க
வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கேரள மற்றும் பாண்டிச்சேரிக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.