SU Venkatesan: என்று விடியும் இந்த இந்தி திணிப்பு? தமிழர்களுக்கு தொடர்ந்து மொழிச்சிக்கல்!

Post Office Jobs: 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது கட்டாயமா? அஞ்சல் துறை பணிக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியதாவாறு செய்வது ஏன்? மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கேள்வி கேட்கும் மதுரை எம்.பி...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2023, 03:09 PM IST
  • அஞ்சல் துறை பணிக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியதாவாறு செய்வது ஏன்?
  • தமிழை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்?
  • 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது கட்டாயமா?
SU Venkatesan: என்று விடியும் இந்த இந்தி திணிப்பு? தமிழர்களுக்கு தொடர்ந்து மொழிச்சிக்கல்! title=

நியூடெல்லி: மத்திய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது என்று வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மதுரை எம்.பி சு வெங்கடேசன். அஞ்சல் துறை கிராமின் டாக் சேவக் (GDS) காலிப்பணியிடங்களுக்குத் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாதவாறு விண்ணப்பப்படிவம் இருப்பதால் அதனை உடனடியாக மாற்றி அமைக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 

இந்தியா முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்கப்படிவத்தை நிரப்ப இயலாதவாறு உள்ளதால் உடனடியாக விண்ணப்பப்படிவத்தை மாற்றியமைக்கக் கோரி அஞ்சல் துறை செயலாளருக்கு எம். பி சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு வார காலமாக அஞ்சல் துறை நியமனங்களில் இந்த அலைக்கழிப்பு இருந்து வருகிறது. ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும் கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | பான் - ஆதார் அட்டையை இணைக்க கடைசி தேதி அறிவிப்பு... அதுவும் அபராதத்துடன்...!

இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்குப் பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167 என்று மதுரை எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும். ஆகவே ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது.

மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்குப் பிரச்சினை இல்லை. 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் என்ன செய்வார்கள். 6 வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை.

இந்தியா முழுமையும் தேர்வுகளை நடத்தும் போது மாநிலங்களில் உள்ள பிரத்தியேக சூழல்கள் கணக்கில் கொள்ளப்படாதது, அதிலும் குறிப்பாக மொழி குறித்த அணுகுமுறையில் காட்டப்படும் அலட்சியம் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், எத்தனை துறைகளில், எத்தனை நியமனங்களில் தமிழ்நாடு தேர்வர்கள் இத்தகைய பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள் என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | ஆதார் கார்டை வைத்து 10 நொடியில் வங்கி கணக்கை சரிபார்க்கலாம்... எப்படி தெரியுமா?

ஜனவரி 27 விண்ணப்ப தேதி ஆரம்பித்து ஒன்பது நாட்கள் ஓடி விட்டன. இன்னும் கடைசி தேதியான பிப்ரவரி 16 க்கு 10 நாட்களே உள்ளன. இன்னும் இதற்குத் தீர்வு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தில் அஞ்சல் துறை செயலாளர் திரு வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு கடிதங்களை எழுதியுள்ளார். மேலும் கடிதத்தில் உடனடியாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாட விவரம் கட்டாயமாகக் கேட்கப்படுவது மாற்றப்பட வேண்டும் என்றும் 9 நாட்கள் வீணாகி இருப்பதால் விண்ணப்ப காலக் கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து, விண்ணப்பங்களில் திருத்தம் செய்யப் பிப்ரவரி 17 முதல் 19 வரை தரப்பட்டுள்ள காலமும் நீட்டிக்கப்பட வேண்டும். இது துறையின் தவறு என்பதால் இந்த குறிப்பிட்ட காரணத்தால் எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விடக் கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, விரைவில் சம்பளம் உயரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News