ஜாக்டோ-ஜியோ நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வசிக்கும் அரசு ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை உயர்நீநிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழக அரசும் அசிரியர்களிடன் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறது. எனினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள 47 அரசு பள்ளிகளில் 30 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தஞ்சை, நெல்லை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேலையில் நெல்லை அம்பாசமுத்திரம் - வைராவிகுளம் பகுதியில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராததை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு பெருமாள் மலை பகுதியில் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 90% பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 60% பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை. அரசு ஆசிரியர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள் மும்மறமாக நடைப்பெற்று வருகிறது.