மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே MP, MLA-க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என ஸ்டாலின் அர்வுருத்தியுள்ளார்....
மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்" என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் இன்று திருவாரூரில் தொடங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, கிராம மக்களின் முன்பாக பேசிய மு.க.ஸ்டாலின், "நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். அரசியலே இதுபோன்ற கிராமங்களில் தான் உருவாகியுள்ளது. கிராமங்கள் தான் நாட்டின் உயிர்நாடி.
மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் லோக்சபா எம்.பிக்கள். எம்.எல்.ஏக்களால் தேர்தெடுக்கப்படுவர்கள் ராஜ்ய சபா எம்.பிக்கள். எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அனைத்திற்கும் காரணமான எம்.எல்.ஏக்களை தேர்தெடுப்பது நீங்கள் தான். மத்தியில் எம்மாதிரியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.