திமுக-தேமுதிக கூட்டணி நல்லெண்ணத்திற்கு பாராட்டும், நன்றியும் கூறிய ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு நன்றி கூறிய திமுக தலைவர் ஸ்டாலின்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2019, 07:49 PM IST
திமுக-தேமுதிக கூட்டணி நல்லெண்ணத்திற்கு பாராட்டும், நன்றியும் கூறிய ஸ்டாலின் title=

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திடீரென சாலிகிராமம் சென்று, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதிமுகவுடன் தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்  கூறுகையில்; தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை சந்தித்தேன். அரசியல் பேச வரவில்லை என அவர் தெரிவித்தார்.  

மேலும், கலைஞர் இறந்த போது அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் விட்டது இன்னும் எனது மனதில் நிழலாடுகிறது. ஒருவயது என்னைவிட குறைவாக இருந்தாலும் என்னை அண்ணன் என்றே அன்போடு அழைப்பார். தேமுதிக கூட்டணிக்கு வந்தால் நீங்கள் வரவேர்பிர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, உங்கள் நல்ல என்னத்திற்கு பாராட்டுக்கள் என கூறினார். பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், மு.க ஸ்டாலின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அப்பொழுது ஒரு செய்தியாளர் திமுக தலைவர் ஸ்டாலினிடம், திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்க்கு உங்கள் கேள்வி நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்டக்கப்பட்டது. உங்கள் நல்ல எண்ணத்திற்கு எனது பாராட்டும், நன்றியும் எனக் கூறினார்.

Trending News