தீபாவளி முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கும் தெற்கு ரயில்வே...

தீபாவளி பண்டியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவையை வழங்க தெற்கு ரயில்வே முடிவுசெய்துள்ளது. இதன் படி நெல்லை, தூத்துக்குடி மற்றும் எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Last Updated : Oct 24, 2019, 07:45 PM IST
தீபாவளி முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கும் தெற்கு ரயில்வே... title=

தீபாவளி பண்டியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவையை வழங்க தெற்கு ரயில்வே முடிவுசெய்துள்ளது. இதன் படி நெல்லை, தூத்துக்குடி மற்றும் எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்., அக்டோபர் 24-ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணி 40 நிமிடங்களுக்குப் புறப்படும் சிறப்பு ரயில்  திருசூர், பாலக்காடு, கோவை, சேலம் மார்க்கமாக மறுநாள் காலை 9 மணி 35 நிமிடங்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.

அதேபோன்று, அக்டோபர் 25-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3 மணி 10 நிமிடங்களுக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் காட்பாடி, சேலம், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாகச் சென்று அடுத்தநாள் காலை 3 மணி 50 நிமிடங்களுக்கு எர்ணாகுளம் சென்றடையும். அதேவேளையில், அக்டோபர் 25-ஆம் தேதி நெல்லையில் இருந்து இரவு 9 மணி 40  நிமிடங்களுக்கு புறப்படும் சிறப்பு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதேப்போன்று, அக்டோபர் 26-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணி 20  நிமிடங்களுக்கு புறப்படும் சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

முன்பதிவில்லா தாம்பரம் - கொச்சுவேலி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து அக்டோபர் காலை 7 மணி 45 நிமிடங்களுக்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாகச் சென்று இரவு 11 மணியளவில் சொச்சுவேலியைச் சென்றடையும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 25ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Trending News