திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க திருச்சி கோட்டம் முடிவு செய்துள்ளது!
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரி வலம் செல்கிறார்கள்.
இந்த மாதம் பௌர்ணமி தினம் வரும் நவம்பர் 12-ஆம் தேதி நிகழ்கிறது. இந்நிலையில் இந்த தினத்தில் ஏராலமான மக்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு ஏதுவாக சிறப்பு ரயில்களை இயக்க திருச்சி கோட்டம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில்., வேலூர் கண்டோன்மெண்ட் - திருவண்ணாமலை - வேலூர் கண்டோன்மென்ட் வழித்தடத்தில் சிறப்பு ரயில் கீழ்காணும் நேரத்தில் இயக்கப்படுகிறது.
வேலூரில் இருந்து நவம்பர் 11-ஆம் தேதி இரவு 9.45-க்கு துவங்கி அன்று இரவு 11.25-க்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, காலை 5.55-க்கு வேலூர் சென்றடையும். இதனைத்தொடர்ந்து அதே ரயில் (எண் : 66018) வேலூர் கண்டோன்மென்டில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.
விழுப்புரம் - திருவண்ணாமலை - விழுப்புரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் கீழ்காணும் நேரத்தில் இயக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து நவம்பர் 11-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு துவங்கி அன்று காலை 11.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, காலை 5.00 மணியளவில் விழுப்புரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிவலம் செல்லும் கவணத்திற்கு..... வருகிற 11- ந்தேதி(திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு பௌவுர்ணமி தொடங்கி 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.