பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 23, 2024, 05:28 PM IST
  • நதியாவின் வீட்டை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
  • ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.
  • தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுத்த அறிக்கை.
பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..! title=

சென்னையில் 17 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பா.ஜ.க அலுவலகத்தை தாக்கிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, தனது பாலியல் தொழிலுக்கு ரவுடியின் துணை வேண்டும் என அந்த வழக்கில் நதியா ஜாமினில் எடுத்துள்ளார்.

NIA அதிகாரிகள் கருக்கா வினோத் ஜாமினில் எடுத்தது யார் ? என விசாரணை செய்தபோது தேனாம்பேட்டையைச் சேர்ந்த நதியா என்பது தெரிய வந்தது. இதையடுத்து சமீபத்தில் NIA அதிகாரிகள் நதியாவின் வீட்டை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

சோதனையில் ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போனை சோதனை செய்து பார்த்த போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அதில் 17 சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. 

சிறுமிகளை பணத்தாசை காட்டியும் நதியா, நதியாவின் சகோதரி சுமதி, சுமதி கணவர் ராமச்சந்திரன் ஆகியோர் பாலியல் தொழிலில் தள்ளி வந்தனர். இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் நதியா, நதியாவின் சகோதரி சுமதி, சுமதி கணவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏழு நபர்களை உடனடியாக கைது செய்தனர். 

மேலும் படிக்க | பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்பு

விபச்சார தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நதியா தான், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை அதற்கு முன்பாக பாஜக அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கிலிருந்து ஜாமினில் வெளியே கொண்டு வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியதும், ஆளுநர் மாளிகை பதிய சொன்ன 124 IPC பிரிவு சேர்ந்து NIA அதிகாரிகள் கைது செய்ததும் குறிப்பிடத்க்கது.

மேலும் படிக்க | மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி - பாதிப்பு இருக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News