அதிர்ச்சி சம்பவம்: தீ பிடித்த மின்சார வாகனத்தின் பேட்டரி

பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்படுவதால், மக்கள் மத்தியில் அவை பிரபலமாகி வருகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2022, 03:13 PM IST
அதிர்ச்சி சம்பவம்: தீ பிடித்த மின்சார வாகனத்தின் பேட்டரி title=

மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்படுவதால், மக்கள் மத்தியில் அவை பிரபலமாகி வருகின்றன. 

ஆனால், சமீப காலமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால், தற்போது மக்கள் மத்தியில் மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பான அச்சமும் அதிகரித்துள்ளது. 

திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் புகை ஏற்பட்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி சென்ற நபர் உடனடியாக சாலையோரம் நிறுத்தி வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்து வைத்தார்.

மேலும் படிக்க | மிகக்குறைந்த EMI-ல் அசத்தலான TVS iQube மின்சார ஸ்கூட்டர்: பெட்ரோல் விலை பற்றி இனி கவலையில்லை

பின்னர் அந்த பேட்டரி அதிக அளவிலான புகையை வெளியே விட்டபடி எரிய துவங்குகிறது. பெட்ரோலுக்கு மாற்றான பேட்டரி வாகனங்கள் பலர் வாங்க நினைத்து வரும் நிலையில் தொடர்ந்து பேட்டரி வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | ஓலா ஸ்கூட்டரில் ஏற்பட்ட ஆபத்தான கோளாறு! வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News