திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி ஸ்டீபன்ராஜ். இவர் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இவரை தலையைத் துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டு இறந்தவர் மீது கொடைக்கானல், திண்டுக்கல் (Dindigul) நகர் வடக்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி பிரச்னை, பெண்களை வைத்து பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ALSO READ | திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்
இந்த நிலையில் புதன்கிழமை இரவு, அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார் ஸ்டீபன். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி தலையைத் துண்டித்து எடுத்துக் கொண்டு சென்றது. ஒரு கிலோமீட்டர் துாரம் தள்ளி, அனுமந்தராயன்கோட்டை உள்ளே செல்லும் தெருவில் தலையை வீசி விட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. கொலைக்கான காரணம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன் கார்த்திகேயன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சங்கரபாண்டி, மருதீஸ்வரர், தேனியைச் சேர்ந்த ராம்குமார், மணிகண்டன், ராஜா ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் மதுபான விற்பனையில் கைதான அனுமன் கோட்டையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இன்பராஜின் கூட்டாளிகள் ஆவர். அதோடு இன்பராஜ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11,500 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஸ்டீபனை வெட்டி கொலை செய்ததை தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2 மாதங்களில் மட்டும் பல கொலை முயற்சித் தாக்குதல்கள், தொடர் திருட்டுகள் என திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR