வட மாநில சிறுவனை கொடூரமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்! காரணம் என்ன?

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பானி பூரி விற்று வரும் சிறுவனை 4 பள்ளி மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 16, 2024, 08:56 PM IST
  • அந்த சிறுவன் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.
  • மார்ச் 12ஆம் தேதியன்று அந்த சிறுவனை மாணவர்கள் தாக்கி உள்ளனர்.
  • சிறுவனின் கண்கள், கன்னம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநில சிறுவனை கொடூரமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்! காரணம் என்ன? title=

சென்னை மயிலாப்பூர் பகுதியில் தள்ளு வண்டியில் பானி பூரி விற்று வரும் சிறுவனை பள்ளி மாணவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதன் முழு விவரத்தை இங்கு காணலாம். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் கமலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கமலேஷ் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் அருகே உள்ள பகுதியில் தள்ளுவண்டியில் பானி பூரி விற்பனை செய்து வருகிறார். 

இவரது பெற்றோர் உத்தர பிரேதசத்தில் சொந்த ஊரில் இருக்கும் நிலையில், சென்னையில் உறவினர் ஒருவருடன் தங்கி இருந்து பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இவரை கடந்த மார்ச் 12ஆம் தேதி அன்று, நான்கு பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். 

இந்த தாக்குதலில் சிறுவனின் கண்கள், கன்னம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அச்சிறுவனின் நிலையை பார்த்த நமது நிரூபர் ஒருவர், சிறுவனிடம் நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க | திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

நமது நிரூபர் அளித்த தகவலின் பேரில் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவனிடம்  விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம், அச்சிறுவன், "சம்பவ தினத்தன்று மாலை நான்கு மணியளவில் வடக்கு மாதா வீதியில், தன்னை 4 பள்ளி மாணவர்கள் வந்து தாக்கினர். அவர்கள் ஏன் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். 

பள்ளி மாணவர்கள் பெயிலில் விடுவிப்பு

இந்த சம்பவத்தில், சிறுவனை தாக்கிய பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். சிறுவன் மீது தாக்குதல் நடத்துவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுவன் பானி பூரி விற்று கொண்டிருக்கும் போது, அச்சிறுவன் மீது இவர்கள் சென்ற சைக்கிள் மோதியதாகவும், அப்போது சிறுவனுக்கும் அந்த மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனால்தான், மார்ச் 12ஆம் தேதியன்று அந்த சிறுவனை பள்ளி மாணவர்கள் தாக்கியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்களை பெயிலில் விடுவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கண்டிக்கத்தக்க போக்கு 

முன்னதாக, வெளி மாநிலத்தவர்களை நோக்கி சமூக வலைதளங்களில் நகைச்சுவை என்ற பெயரில் இன ரீதியான தாக்குதல்கள் மேற்கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இதுபோன்ற போக்கு மாணவர்கள் உள்ளிட்டோரின் மத்தியிலும் வேரூன்றிவிட்டனவோ என்ற அச்சம் இந்த சம்பவங்கள் மூலம் ஏற்படுகிறது. சிறுவர்களுக்கு இடையிலான சிறு தகராறு என்று இதனை கடந்துபோவது எதிர்காலத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெளி மாநிலத்தவர்கள் மீதான தவறான சிந்தனை போக்கு கண்டிக்கத்தக்கது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இதுகுறித்த தெளிவை ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர் மாணவர்கள் இடையே ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கூட இந்த விஷயத்தில் தயை கூர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வை களத்திலும், இணையத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.  

மேலும் படிக்க | சசிகலா புஷ்பா அல்லது சரத்குமார்? கனிமொழிக்கு எதிரா தூத்துக்குடியில் களமாடப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News