மதுபோதையில் ரகசிய காதலனுடன் உல்லாசம்..! அழுத குழந்தைக்கு நேர்ந்த கதி! என்ன நடந்தது?

Tamil Nadu Crime: ஓமலூர் அருகே சிக்கம்பட்டியில் தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து 1 வயது பெண் குழந்தையை தாய்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : May 10, 2023, 02:03 PM IST
  • மல்லேஷ் - கலைவாணி ஆகியோருக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளது.
  • கலைவாணியை மல்லேஷ் மதுபோதைக்கு அடிமையாக்கியுள்ளார்.
  • இவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மதுபோதையில் ரகசிய காதலனுடன் உல்லாசம்..! அழுத குழந்தைக்கு நேர்ந்த கதி! என்ன நடந்தது? title=

Tamil Nadu Crime: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள புதுவடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கலைவாணி. இவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள செங்கல் சூளையில் சக்திவேல் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அங்கு தான் மல்லேசுக்கும், கலைவாணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்தை தாண்டிய உறவாக மாறியுள்ளது. 

இதுகுறித்து அறிந்த சக்திவேல் தனது மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அவரது காதல் கண்ணை மறைத்துள்ளது. கணவரை விட்டுவிட்டு ரகசிய காதலன் மல்லேஷ் உடன் தனியே சென்றுவிட்டார். அவருடன் ஒரு வயது பெண் குழந்தையையும் அழைத்துச் சென்றுள்ளார். ஓமலூர் அருகே சிக்கம்பட்டி ஊராட்சி புதூர்காடம்பட்டிக்கு இவர்கள் சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை அழைத்து வர வேண்டாம் என மல்லேஷ் பலமுறை கூறியுள்ளார். இதனால் அடிக்கடி இவர்களுக்கு சண்டை வந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த வாரம் இரவு போதையில் இருவரும் தனிமையில் இருந்த போது குழந்தை அழுததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான மல்லேஷ் மற்றும் கலைவாணி குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியுள்ளாது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்கள் வேலையில் பிஸியாக இருந்துள்ளனர். மறுநாள் காலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் கர்நாடகாவுக்கு தப்பியுள்ளனர். 

மேலும் படிக்க | Honey Trap செய்து மிரட்டிய கேரள பெண் அஸ்வதி அச்சு..! Fake ID-யிடம் சிக்கிய சின்ராசுகள்!

சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தது. இதனையடுத்து கலைவாணியை போலீசார் தேடியுள்ளனர். கர்நாடகாவில் காதலனுடன் பதுங்கி இருந்த கலைவாணியை போலீசார் கைது செய்தனர். அவர்களை தாராமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பலரையும் நிலைகுலைய செய்துள்ளது. 

மல்லேஷ் கலைவாணியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மதுப்பழக்கத்துக்கு அடிமையாக்கியுள்ளார். அதோடு பெண் குழந்தையை சக்திவேலிடம் ஒப்படைக்க கூறி அடிக்கடி சண்டை செய்து வந்துள்ளார் மல்லேஷ். இந்த சூழலில் தான் கடந்த மே 1ஆம் தேதி இருவரும் ஒன்றாக இரவு மது அருந்தியுள்ளனர். அதோடு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது இரவில் திடீரென குழந்தை அழுததால் போதையில் ஆத்திரமடைந்து கலைவாணியும் மல்லேஷும் இணைந்து குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர். 

அதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தது என போலீசாரிடம் கலைவாணி வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு மல்லேஷ் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி குழந்தையை கொலை செய்ய தூண்டியதாகவும் போலீசாரிடம் கலைவாணி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாரமங்கலம் போலீசார்  குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | கடையை சூறையாடிய மதுபோதை கும்பல்! வெளியான சிசிடிவி காட்சிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News