குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2021, 10:47 AM IST
  • கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரத்தைக் காட்டி வருகிறது.
  • தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிப்பு.
  • ஒன்று முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளை  குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு  title=

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரத்தைக் காட்டி வருகிறது. பல மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், கொரோனா வைரசின் இந்த புதிய மாறுபாடு பல புதிய விகாரங்களைக் காட்டி வருகின்றது. 

தமிழகத்திலும் நாளுக்கு நாள் ஒற்றை நாள் தொற்றின் அளவு அதிகரித்து வருகின்றது. முன்பு இருந்த வகையை விட வைரசின் புதிய மாறுபாடு பல புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. முன்னர் வயதானவர்கள் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த புதிய மாறுபாட்டில், வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரையும் வைரஸ் வெகுவாக தாக்கி வருகின்றது. இதில் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. இது தற்போது வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களால் தெளிவாகிறது. மேலும் இந்த புதிய மாறுபாட்டில் அறிகுறிகளும் அதிகம் தென்படாததால், மக்கள் மனதில் பீதி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu), கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

ALSO READ: தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஒன்று முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள் இந்த மாறுபட்ட கொரோனா வைரஸ் (Coronavirus) வகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த முறை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் எடுக்கப்பட்ட தரவு அச்சத்தை அதிகரிகின்றது. மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை 79,688 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகராஷ்ட்ராவில் மட்டும் 60,884 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9,882 குழந்தைகள் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள். சத்தீஸ்கரில் 5,940 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 922 குழந்தைகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, கர்நாடகாவில் 7,237 குழந்தைகளும், உத்தரப் பிரதேசத்தில் 3,004 குழந்தைகளும், டெல்லியில் 2,733 குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

சென்ற ஆண்டு பரவிய கொரோனா தொற்றில், குழந்தைகளுக்கு அதிக அறிகுறிகள் தென்படவில்லை. எனினும், அதை ஒப்பிடும் போது உரு மாறிய கொரோனா வைரசில், குழந்தைகளுக்கு பல வித அறிகுறிகள் தென்படுகின்றன என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவை அனைத்தும் பொதுவாக தென்படும் அறிகுறிகளாகவும் இருப்பதால், இவற்றை பெற்றோர் சாதாரண காய்ச்சல், அல்லது சளிக்கான அறிகுறியாக எண்ணி ஏமாந்துவிடும் அபாயமும் உள்ளது. கொரோனா தீண்டிய குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற அறிகுறிகள் அதிகமாக தென்படுகின்றன. 

இதில் வேதனையான விஷயம் என்னவென்றல், இன்னும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி (Vaccine) பரிசோதனை முழுமையாக முடிவடையவில்லை. ஆகையால், குழந்தைகளை அனைத்து தடுப்பு நடவடிகைகளையும் கடைபிடிக்க பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரும் மிகுந்த எச்சரிக்கையை கையாண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

ALSO READ: Coronavirus New Symptoms: மிரளவைக்கும் கொரோனாவின் புதிய அறிகுறைகள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News