பொள்ளாச்சியில் 2 செயின் திருடர்கள் மரணம்: அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : Jul 26, 2023, 12:08 PM IST
  • விபத்தில் உயிரிழந்த கொள்ளையர்கள்.
  • தடுப்பு சுவர் மீது மோதி விபத்து.
  • போலீசார் தீவிர விசாரணை.
பொள்ளாச்சியில் 2 செயின் திருடர்கள் மரணம்: அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்! title=

பொள்ளாச்சி பாலக்காடு சாலை என்ஜிஎம் கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  விசாரணையில் திங்கட்கிழமை காலை கடை வீதியில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தான் விபத்தில் இறந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

bike

மேலும் படிக்க | Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை... மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!

விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதும், மற்றொரு பைக்கில் வந்த இவர்களின் கூட்டாளிகள் அங்கிருந்து வாகனத்தை போட்டுவிட்டு தப்பியுள்ளனர்.  இறந்த இரண்டு கொள்ளையர்கள் மீது பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள், இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு  வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் தற்போது விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொள்ளாச்சியில் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆறாம் தேதி செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து இளைஞர்கள் 5 பேர் தப்பியுள்ளனர்.

இறந்த சஞ்சய் மற்றும் ஹரிமதன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு சீர்திருத்த முகாமில் இருந்து தப்பியவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களுடன்  மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து தப்பிய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News