ஜீ தமிழ் நியூஸுக்கு விருது - ஷேர்சாட்டின் அங்கீகாரம்

ஷேர்சாட்டின் ஸ்டார் பார்ட்னர் விருது ஜீ தமிழ் நியூஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 30, 2022, 05:11 PM IST
  • ஜீ தமிழ் நியூஸுக்கு விருது
  • முதலிடத்தை பிடித்திருக்கிறது ஜீ தமிழ் நியூஸ்
  • ஷேர்சாட்டின் ஸ்டார் பார்ட்னர் விருதை பெற்றிருக்கிறது
ஜீ தமிழ் நியூஸுக்கு விருது - ஷேர்சாட்டின் அங்கீகாரம் title=

சமூக வலைதளங்களில் உலகம் சுற்றிக்கொண்டிருக்கையில் செய்தி தளங்களும் அதற்குள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட தளங்களில் ஜீ தமிழ் நியூஸும் ஒன்று. சார்பில்லாத, சமரசமில்லாத செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஜீ தமிழ் நியூஸை செயலி வழியாகவும், சமூக வலைதள பக்கங்கள் வழியாகவும் மக்கள் விரும்பி பின் தொடர்ந்துவருகின்றனர். அதற்கேற்றவாறு பல வழிகளில் ஜீ தமிழ் நியூஸின் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

அந்தவகையில் ஷேர்சாட் நிறுவனத்தின் வழியாகவும் உள்ளூரிலிருந்து உலகம்வரை ஜீ தமிழ் நியூஸின் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக அடித்தட்டு வலியிலிருந்து அதிகாரவர்க்கத்தின் கோரமுகம், சினிமா, விளையாட்டு என மக்களுக்கான செய்தி தளமாக ஜீ தமிழ் நியூஸ் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

ShareChat

ஜீ தமிழ் நியூஸ் யூட்யூப் சேனலின் நெறியாளர்களும் பல நிகழ்ச்சிகளில் முன்னெடுத்த அறமான கேள்விகளும் மக்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி மக்களுக்கான எங்களின் குரலை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஷேர்சாட் நிறுவனம் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறது.

ShareChat

இந்தச் சூழலில் துரிதமாகவும் துல்லியமாகவும் இந்த வருடத்தில் பல செய்திகளை வழங்கும், வழங்கப்போகும் Zee தமிழ் நியூஸுக்கு இந்த வருடத்துக்கான Sharechat Partner என்ற விருதை ஷேர்சாட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதில், முதலிடத்தில் Zee தமிழ் News இடம்பெற்றுள்ளது. தினகரன் டெய்லி செய்தி நிறுவனமும், நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனமும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மேலும் படிக்க | முன்னாள் திமுக எம்பி இறப்பில் திருப்பம்... திட்டமிட்ட கொலையா? - 5 பேர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News