மெக்கானிக்கல் இன்ஜினியர் டூ தமிழ்நாடு டிஜிபி... யார் இந்த சங்கர் ஜிவால்?

Tamilnadu New DGP: உளவுத்துறையில் நீண்ட நெடிய அனுபவம் இருக்கும் சங்கர் ஜிவால் காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பொறுப்பான சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக உயர்ந்திருக்கும் இவர் பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Sudharsan G | Last Updated : Jun 29, 2023, 08:28 PM IST
  • தமிழக காவல்துறையின் 31ஆவது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்.
  • சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.
  • சைலேந்திராபாபு நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
மெக்கானிக்கல் இன்ஜினியர் டூ தமிழ்நாடு டிஜிபி... யார் இந்த சங்கர் ஜிவால்? title=

Tamilnadu New DGP: தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு நாளை (ஜூன் 30) ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை மாநகர கவால் ஆணையராக பணியாற்றி வந்தார். தமிழக காவல்துறையின் 31ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்க உள்ளார். 

முன்னதாக, சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று நியமிக்கப்பட்டார். இவர் தமிழக காவல் துறையின் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றி வந்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை சேர்ந்தவர் சங்கர் ஜிவால். இவர் 1965ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 14ஆம் தேதியில் பிறந்தவர். இவர் 1990ஆம் ஆண்டு batch-ஐ சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். பொறியியல் பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் மெக்கானிகல் இன்ஜினியராக பணியாற்றி, அதன் பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆனார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்... ஆளுநர் சொல்லும் காரணம் என்ன?

தொடர்ந்து, இவர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவான என்சிபி, திருச்சி போலீஸ் கமிஷனர், உளவுப் பிரிவில் டிஐஜி மற்றும் ஐஜி சிறப்பு அதிரடி படை ஏடிஜிபி என பல பொறுப்புகளில் வகித்திருக்கிறார். மேலும் மத்திய அரசின் என்டிஎப் பிரிவில், 6 ஆண்டுகள் சத்தியமங்கலம் பகுதியில் பணியாற்றினார். இவர் இரண்டு முறை ஜனாதிபதி விருதை பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது  இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னை கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் இவர் சென்னை மாநகராட்சியை மேம்படுத்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, ரவுடிஸத்தை கட்டுப்படுத்துவது, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது போன்ற பல அதிரடி விஷயங்களை செய்துள்ளார். இவர் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் வைக்கப்பட்டாலும் சென்னை காவல் ஆணையராக மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

இந்நிலையில் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபுவின் பதவி காலம் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் உயரிய பொறுப்பான தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இவர் காவல்துறையில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | போலீஸார் போட்ட ஸ்கெட்சில் வசமாக சிக்கிய ரவுடி அப்பளம் ராஜா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News