மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தமிழகத்தில் தொடரும் அவலம்!

இந்த வழக்கில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், ரமேஷ், லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2022, 11:05 AM IST
  • விஷவாயு தாக்கி 3 பேர் பலி
  • 3 பேர் மீது வழக்குப்பதிவு
  • நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தமிழகத்தில் தொடரும் அவலம்!  title=

மதுரை மாநகராட்சியில் கழிவுநீர் தொட்டி சீரமைப்பு பணியின் போது விஷவாயு தாக்கி 3 பணியாளர்கள பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் செல்வதில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மோட்டார் பழுது நீக்குவதற்காக மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் மற்றும் கோட்டைமேடு பகுதியை சார்ந்த லட்சுமணன் ,மாடக்குளத்தை சேர்ந்த சரவணன் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து மூன்று பணியாளர்களும் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர்.

மேலும் படிக்க | குற்றவாளிகளை பிடிக்கும் போது துப்பாக்கிகளை வைத்துக்கொள்ளலாம்! கோவை எஸ்.பி. அதிரடி உத்தரவு!

இதனையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த லட்சுமணன், சிவகுமார், சரவணனை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்டனர். அவர்களை பரிசோதித்ததில் மூன்று பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. 

Madurai Accident

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், ரமேஷ், லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை: கொடூரன் கைது!

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட மூன்று ஒப்பந்த பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மதுரை மாநகராட்சியில் கழிவு நீர் தொட்டி பழுதுநீக்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளின் போது பணியாளர்களுக்கு சுவாச கருவி போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் எத்தனை காலத்துக்கு தான் கழிவுநீர் தொட்டியில் அப்பாவி மக்களின் உயிர்கள் போகுமோ என சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற மரணங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News